காஜாங்,
கடந்த மாதம் 27ஆம் தேதி புக்கிட் காஜாங் டோல் சாவடியில் 4 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் காயமுற்ற பொதுப்பணி இலாகா ஊழியர் இன்று உயிரிழந்தார்.
அச்சமயம் 4 சக்கர பெரு வாகனத்தில் பயணித்த முகமட் ஹாஃபிஸ் அனுவார் (வயது 48) இன்று காலை 11 மணியளவில் காஜாங் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இவர் முன்னதாக ஷா ஆலம் பொதுப்பணி இலாகாவில் பணியாற்றி வந்தார்.
முன்னதாக அவரை புத்ரா ஜெயா மருத்துவமனைக்கு மாற்றுவதாக இருந்தது.
ஆனாலும் அவர் இன்று காஜாங் மருத்துவமனை ஐசியு பிரிவில் உயிரிழந்தார்.
சவப்பரிசோதனைக்கு பின் அவரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று காஜாங் போலீஸ் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர். முன்னதாக இந்த விபத்தில் 12 மாத குழந்தை உயிரிழந்த நிலையில் இது இரண்டாவது மரணமாகும்.