கோலாலம்பூர்,
அரசாங்க நிகழ்ச்சி ஒன்றில் மது பானங்கள் வழங்கப்பட்டதை சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் மறுத்தது தொடர்பில் முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் விமர்சனம் செய்துள்ளார்.
கிங் சிங்கின் மறுப்பு பொய் என அவர் தமது இஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் கைரி அந்த பதிவில் மீன்களை உதாரணம் காட்டி பழமொழி ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
இது மட்டுமல்லாது சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியின் அழைப்பிதழையும் அவர் பகிர்ந்துள்ளார். முன்னதாக அந்த 2025 அனைத்துலக சுற்றுலா சந்திப்பு அறிமுக விழா- விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியில் மது பானங்கள் வழப்பட்டதாக மஸ்ஜிட் தானா நாடாளுமன்ற உறுப்பினர் மாஸ் எர்மியாத்தியின் குற்றச்சாட்டை கிங்
சிங் மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.