சுங்கை பூலோ,
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தையில் வியபாரத்தை தொடங்குவதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ள வியபாரிகளுக்கு முன்னதாக அவர்கள் செலுத்திய முன்பணம் கூடிய விரைவில் திருப்பி வழங்கப்படும்.
தொழில்முனைவோர் மேம்பாடு- கூட்டுறவுக்கழகத்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் இந்த உறுதியை வழங்கினார்.
அந்த சந்தை வியபாரிகள், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு- வசதியை கருத்தில் கொண்டு கோலாலம்பூர் மாநகர் மன்ற தரப்பு ஏற்கெனவே இன்னும் வலுவான- பெரிய கூடாரங்களை மாற்றி அமைத்துள்ளது.
அதே சமயம் இந்த சந்தை ஏற்பாட்டில் தொழில்முனைவோர் மேம்பாடு- கூட்டுறவுக்கழகத்துறை அமைச்சு நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது என்ற கருத்தையும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் மறுத்தார்.
மாறாக அது கோலாலம்பூர் மாநகர் மன்றம் – பேங்க் ரக்யா கூட்டமைப்பு ஆகும்.
இவ்விவகாரத்தில் பிரச்சனை எழுந்த பிறகுதான் அமைச்சு தலையிட்டது.
தற்போது அந்த சந்தையில் அனைத்தும் சீரான இயங்குவதை உறுதி செய்ய அமைச்சு கோலாலம்பூர் மாநகர் மன்ற தரப்புடன் இணைந்து செயலாற்றி வருவதாகவும் ரமணன் சொன்னார்.