அலோர் ஸ்டார்,
இன்று மாலை 4 மணி வரையிலான நிலவரப்படி கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அந்த மாநிலத்தில் இன்று மேலும் ஒரு தற்காலிக நிவாரண முகாம் திறக்கப்பட்டுள்ளது.
அலோர் ஸ்டார், லங்கார் தேசியப் பள்ளியில் அந்த நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கு தங்க வைக்கபடும் மக்களின் எண்ணிக்கை இன்னும் கணக்கிடப்படுகின்றது என கெடா பொது பாதுகாப்பு படை துணை இயக்குனர் மேஜர் முகமட் சுஹாய்மி தெரிவித்தார்.
அதே சமயம் போக்கோ செனா பொது மண்டபத்தில் தற்போது 33 குடும்பங்களை சேர்ந்த 109 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
இந்நிலையில் பேராக்கில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணி க்கை கணிசமாக குறைந்துள்ளது.
அந்த மாநிலத்தில் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டங்களில் தலா ஒரு தற்காலிக நிவாரண முகாம் இன்னமும் திறக்கப்பட்டுள்ளதாக பேராக் பேரிடர் மேலான்மை செயற்குழு செயலகம் கூறியுள்ளது.