லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படத்தில் வில்லியாக நடித்திருந்தார் கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகை ரச்சிதா ராம். அந்த படத்தில் அவரது நடிப்பு விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் பாராட்டுகளைப் பெற்றது.
சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய அவர், கன்னடத்தில் நாயகியாக நடித்திருக்கும் ‘லேண்ட் லார்ட்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார். அதில் அவருக்கு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் சூட்டப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நயன்தாரா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ரச்சிதா, “ரஜினிகாந்த் சார் என் நடிப்பைப் பார்த்துவிட்டு பாராட்டியதே மிகப் பெரிய உற்சாகத்தை அளித்தது. லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் அவரது அடுத்த படத்திலும் எனக்கு முக்கியமான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. ஆனால் *‘கூலி’*க்கு பிறகு எனக்கு அதிகமாக எதிர்மறை கதாபாத்திரங்களே வருகிறது,” என்று பேட்டியளித்துள்ளார்.
மேலும், தனது பெற்றோர் தற்போது தகுந்த வரனைத் தேடிவருவதாகவும், விரைவில் திருமணம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நயன்தாரா ரசிகர்கள், “திருமண வாழ்த்துகள் சரி. ஆனால் அதற்காக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை தானாக எடுத்துக்கொள்வது எந்த வகையிலும் நியாயம் இல்லை” எனக் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.