Offline
Menu
கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்த செய்தி தொகுப்பாளர்
By Administrator
Published on 10/07/2025 09:00
News

அபுஜா,மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் அரைஸ் என்ற தொலைக்காட்சி செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த செய்தி நிறுவனத்தில் சொமுச்குவா சவுமி மடூஹ்வா (வயது 29) செய்தி தொகுப்பாளராக பயணியாற்றி வந்தார். இவர் தலைநகர் அபுஜாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார்.

இந்நிலையில், சவுமி மடூஹ்வாவின் வீட்டிற்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆயுதமேந்திய கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்ததை அறிந்த சவுமியா தப்பிக்க தனது வீடு அமைந்துள்ள 3வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் சவுமியாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக சவுமியாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சவுமியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Comments