தெஹ்ரான்,இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே கடண்டஹ் ஜுன் மாதம் மோதல் மூண்டது. 12 நாட்கள் நடந்த இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர்.
இதனிடையே, இந்த மோதலுக்குப்பின் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக தங்கள் நாட்டை சேர்ந்த பலரையும் ஈரான் கைது செய்து வருகிறது. கைது செய்யப்படும் நபர்களுக்கு எந்தவித விசாரணையுமின்றி விரைவில் மரண தண்டனை நிறைவேற்றி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக மேலும் 6 பேருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. மரண தண்டனை நிறைவேற்ற 6 பேரும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும், இஸ்ரேலுக்கு உளவு தகவல்களை கொடுத்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.