சென்னை:
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.38 கோடியில் 729 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
திருப்பூர், சேலம், தருமபுரி, விருதுநகர் ஆகிய இடங்களில் வீடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.