Offline
Menu
மதுபோதையில் 1 வயது குழந்தையை குத்திக்கொன்ற கொடூர தந்தை – அதிர்ச்சி சம்பவம்
By Administrator
Published on 10/07/2025 09:00
News

லக்னோ,உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் சுரிமன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ரூபேஷ். இவரது மனைவி ரினா. இந்த தம்பதிக்கு அனன்யா (வயது 3) என்ற மகளும், கினு (வயது 1) என்ற மகனும் இருந்தனர்.

இதனிடையே, மது போதைக்கு அடிமையான ரூபேஷ் அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவி ரினாவை கடுமையாக தாக்கியுள்ளார். தடுக்க சென்ற தனது தந்தையையும் ரூபேஷ் தாக்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு ரூபேஷ் குடித்துவிட்டு மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் இருந்த மனைவி ரினா மற்றும் தந்தையை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால், ரினாவும் அவரது மாமனாரும் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். ரினா தனது 2 குழந்தைகளையும் ரூபேஷ் வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளார். மனைவி வீட்டை விட்டு சென்றதால் ஆத்திரமடைந்த ரூபேஷ் தனது 1 வயது மகன் கினுவை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இரவு உறவினர் வீட்டில் தங்கிவிட்டு இன்று காலை ரினா தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது 1 வயது மகன் கினு கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் கொல்லப்பட்ட குழந்தையின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மகனை கொலை செய்த ரூபேசை போலீசார் கைது செய்தனர்.

Comments