கோலாலம்பூர்:
12 வயது சிறுமி வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்த அளவிற்கு தந்தை அவரை அடித்ததாக சந்தேகிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் அண்மையில் கெப்போங் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து 2091சிறார் சட்டம் பிரிவு 31(1)(a) கீழ் விசாரணை திறக்கப்பட்டதை அடுத்து 42 வயதான அந்த ஆடவர் நேற்று தொடங்கி 4 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபடோல் மர்சூஸ் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட சிறுமி சமையலறையை சுத்தம் செய்யாதது, பாத்திரங்களை கழுவாதது போன்ற செயல்களுக்காக அவரை அந்த ஆடவர் அடித்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் அந்த ஆடவருக்கு குற்றப் பின்புலன்கள் ஏதும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை நிறைவு பெற்றதும் புதன்கிழமை டிபிபி தரப்பிடம் ஒப்படைக்கப்படும் என்றார் அவர்.