Offline
Menu
168,000 ரிங்கிட் போதை பொருட்கள் பறிமுதல்; கும்பல் தலைவன் உட்பட நால்வர் கைது
By Administrator
Published on 10/07/2025 09:00
News

ஜொகூர் பாரு:

போலீசார் மேற்கொண்ட தொடர் அதிரடி சோதனைகளில் நால்வர் கைது செய்யப்பட்டதோடு 168,000 ரிங்கிட் மதிப்பிலான போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

செப்டம்பர் 30ஆம் தேதி நடத்தப்பட்ட வெவ்வெறு சோதனைகளில் அந்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக இஸ்கண்டார் புத்ரி ஓசிபிடி எம். குமரேசன் தெரிவித்தார்.

குறிப்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஒரு ஆடவன் ( வயது 41) இவ்வாண்டு மே மாதம் முதல் செயல்பட்டு வந்த போதைப் பொருள் விநியோக கும்பலில் தலைவன் என சந்தேகிக்கப்படுகின்றது

அந்த ஆடவன் கைது செய்யப்பட்டதை அடுத்து புக்கிட் இண்டாவில் பெட்ரோல் நிலையம் ஒன்றின் அருகே சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் இருந்த இருவர் (ஜோடி) கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து கைதான முதன் நபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் 36 வயதுடைய ஆடவனும் கைது செய்யப்பட்டான்.

அந்த ஆடவன் போதைப் பொரு விநியோகத்தின் இடைத் தரகர் என்றும் அந்த ஜோடி இந்த கும்பலிடம் போதைப் பொருள் வாங்கும் பித்தர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் முதல் கைது நடவடிக்கையின் போது 13,806 கிராம் எடையிலான ஹெரோயின், 1,110 கிராம் எடையிலான ஷாபு வகை போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் விவரித்தார்.

Comments