கோத்தா கினாபாலு:
இன்று நண்பகல் சபா மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலத்தின் 17வது சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் (EC) தனது தலைமை அதிகாரிகளுடன் சிறப்புச் சந்திப்புக் கூட்டம் நடத்தும் என தேர்தல் ஆணையர் டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹாருன் தெரிவித்துள்ளார்.
“சபா மாநிலச் சட்டமன்றத்தின் கலைப்பைத் தொடர்ந்து, தேர்தல் தொடர்பான விவரங்கள் சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்,” என தத்துக் ஸ்ரீ ரம்லான் ஹாருன் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது, சட்டவிதிகளின்படி, மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், தேர்தல் ஆணையம் உடனடியாக தலைமை அதிகாரிகளுடன் அவசரக் கூட்டம் நடத்துகிறது என்று அவர் இன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாநில ஆளுநரின் ஆலோசனையின்படி, இன்று நண்பகல் மாநில அரசை கலைத்ததாக தேர்தல் ஆணையத்திடம் அறிவித்துள்ளார். இதையடுத்து, தேர்தலுக்கான முன் நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று, சபா மாநில முதலமைச்சர் ஹஜிஜி நூர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.