ரோம், ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு இத்தாலி. இந்நாட்டின் பசிலிக்காடா மாகாணம் மடிரா நகரில் உள்ள சாலையில் நேற்று கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் இந்தியர்கள் உள்பட 10 பேர் பயணித்தனர்.
இந்நிலையில், ஸ்கென்செனோ ஜொனிகா என்ற பகுதியில் சென்றபோது சாலையில் வேகமாக வந்த லாரி, கார் மீது மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேவேளை, விபத்தில் உயிரிழந்த மனோஜ் குமார் (வயது 34), சுரஜ் சிங் (வயது 33), ஹர்வீந்தர் சிங் (வயது 31), ஜஸ்கரன் சிங் (வயது 20) ஆகிய 4 பேரின் உடல்களையும் இந்தியாவுக்கு கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.