Offline
Menu
எவரெஸ்ட் பனிப்புயலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு – 137 பேர் பத்திரமாக மீட்பு
By Administrator
Published on 10/08/2025 09:00
News

பீஜிங்,உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்கே திபெத் பிராந்தியம் அமைந்துள்ளது. சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியான திபெத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலை சரிவுகளில் பனிப்புயல் நிலவி வருகிறது. இந்த மலைச்சரிவுகளில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் முகாம்களை அமைத்து தங்கியிருந்த நிலையில் இந்த பனிப்புயலால் ஏற்பட்டது.

இந்த பனிப்புயலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கினர். இந்தநிலையில் பனிப்புயலில் சிக்கி சீனாவை சேர்ந்த 41 வயது மலையேற்ற வீரர் உயிரிழந்தார். இதுவரை 137 பேர் மீட்கப்பட்டனர். எவரெஸ்ட் பனிப்புயலில் சிக்கி தவித்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Comments