Offline
Menu
சீனாவுக்கு டுரியான் ஏற்றுமதி செய்து ஏழு ஆண்டுகளில் RM6.37 பில்லியன் வருவாய் ஈட்டிய மலேசியா
By Administrator
Published on 10/08/2025 09:00
News

கோலாலம்பூர்:

கடந்த ஏழு ஆண்டுகளில் (2018 – 2025 ஜூன் வரை) சீனாவுக்கு டுரியான் ஏற்றுமதி செய்து மலேசியா மொத்தம் 115,359 டன், RM6.37 பில்லியன் (US$1.84 பில்லியன்) வருவாய் ஈட்டியுள்ளது என்று விவசாய மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், 2018ஆம் ஆண்டிலிருந்து சீனாவுக்கு டுரியான் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டது.

2018ஆம் ஆண்டில் மட்டும் 3,555 டன் டுரியான் சுளைகள் மற்றும் பசைகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன; அவற்றின் மதிப்பு RM202 மில்லியன்.

பின்னர், 2019 ஜூன் மாதத்திலிருந்து உறைபடுத்தப்பட்ட (Frozen) டுரியான் ஏற்றுமதி தொடங்கப்பட்டது. அப்போது 3,177 டன் டுரியான் சீனாவுக்கு அனுப்பப்பட்டன; மதிப்பு RM143 மில்லியன் ஆகும்.

மலேசியா, இனி தைவான் மற்றும் பெரு சந்தைகளுக்கும் டுரியான் ஏற்றுமதி செய்யும் திட்டத்தைக் கொண்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Comments