Offline
Menu
கோயில்களுக்கான அரசு மானியங்களில் இடைத்தரகர்கள் ஏன்? – டத்தோஸ்ரீ ரமணன்
By Administrator
Published on 10/09/2025 12:34
News

கோலாலம்பூர்:

கோயில்களுக்கான அரசு மானியங்களை பெறுவதில் அரசு சாரா அமைப்புகள் இடைத்தரகராக செயல்பட வேண்டிய அவசியம் என்ன என்று தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுமார் 1,000 ஆலயங்களுக்கு தலா RM20,000 ஒதுக்கும் திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, குறிப்பாக இந்திய சமூகத்துக்கான நலத் திட்டங்களுக்காக வழங்கப்பட உள்ளது.

இதைப்பற்றி அவர் கூறியதாவது:

பிரதமர் ஏற்கனவே இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

நிதி தேவைப்படும் ஆலயங்கள், மூன்றாம் தரப்பு இடையீடு இல்லாமல் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

எனவே, அரசு நிதியை கையாள அரசு சாரா அமைப்புகளை “இடைத்தரகர்களாக” நியமிக்க வேண்டிய காரணமேது என்று கேள்வி எழுகின்றது.

“இந்த நிதி விவகாரத்தில் அரசு சாரா அமைப்புகள் வங்கி போல நடந்து கொள்ள வேண்டிய நிலைமை எதற்காக? அவற்றின் உண்மையான நோக்கம் என்ன?” என்று டத்தோஸ்ரீ ரமணன் வினவினார்.

Comments