கோலாலம்பூர்:
இந்தியாவிற்கு பயணிக்கும் வெளிநாட்டு பயணிகள் தங்கள் வருகை விவரங்களை ஆன்லைனில் நிரப்பிக்கொள்ளும் புதிய டிஜிட்டல் வசதியை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
புதிய நடைமுறையின் மூலம், பயணிகள் ஆன்லைனில் அல்லது குடிநுழைவுக் கவுண்டர்களில் வந்தவுடன் இறங்கு அட்டையை நிரப்பலாம். இது சன நெரிசலைக் குறைத்து, அனைத்துலக பயணிகளுக்கு சுமுகமான அனுமதி செயல்முறைகளை உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் படிவத்தை இந்திய குடிநுழைவுத்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், இந்திய விசா ஆன்லைன் போர்டல், அல்லது ‘Indian Visa Su-Swagatam’ மொபைல் பயன்பாடு மூலமாக அணுகலாம். மேலும் குறித்த படிவம் இந்தியாவில் தரையிறங்குவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் நிரப்பப்பட வேண்டும்.
டிஜிட்டல் அமைப்பு முழுமையாக பழக்கத்திற்கு வரும் வரை, அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரை
இறங்கு அட்டைகளும் இணைந்தே பயன்பாட்டிலிருக்கும் என்று அது மேலும் கூறியுள்ளது.
இந்த மாற்றம், இந்தியாவின் குடியேற்ற நடைமுறைகளை நவீனமயமாக்கும் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாகும்.