ஜோகூர் பாரு: பாசீர் கூடாங் நெடுஞ்சாலையில் KM25.8 இல் இரு மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தாக ஸ்ரீ ஆலம் OCPD உதவி ஆணையர் சொஹைமி இஸ்காக் தெரிவித்தார்.
20 வயதான பாதிக்கப்பட்ட உள்ளூர் பெண், தனது இயந்திரத்தின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானார் என்று அவர் வியாழக்கிழமை (அக்டோபர் 9) ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பின்னால் இருந்து வந்த மோட்டார் சைக்கிளில் வந்த 50 வயது மலேசிய ஆடவர் விபத்துக்குள்ளான பைக்கைத் தவிர்க்க முடியாமல் பாதிக்கப்பட்டவரை மோதியதாக ACP சொஹைமி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவருக்கு உள் காயங்கள் ஏற்பட்டன. ஜோகூர் பாருவில் உள்ள சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது இறந்தார் என்று அவர் கூறினார். மேலும் அந்த நபருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. சாட்சிகள் அல்லது வழக்கு பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 07-386 4222 என்ற எண்ணில் ஸ்ரீ ஆலம் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு ஏசிபி சோஹைமி அழைப்பு விடுத்தார்.