ஜோர்ஜ் டவுன்:
ஆயர் ஹீத்தாம், கப்போங் மெலாயு அடுக்குமாடி குடியிருப்பில் பூட்டியிருந்த வீடோன்றில் 80 வயது இந்தித மூதாட்டி இறந்து கிடக்க காணப்பட்டார்.
பி. சரோஜா என்ற அந்த மூதாட்டி சுயநினைவின்றி காணப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
முன்னதாக இச்சம்பவம் குறித்து மாலை 3.56 மணியளவில் அவசர அழைப்பு வந்தது.
உடனே அந்த குடியிருப்புக்கு விரைந்த மீட்பு படையின சிறப்பு கருவியை ஜொண்டு வீட்டிற்குள் நுழைந்ததாக பினாங்கு தீயணைப்பு – மீட்புப்படை நடவடிக்கை பிரிவு துணை இயக்குனர் ஜோன் சகுன் தெரிவித்தார்.
தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக அந்த மூதாட்டியில் சடலம் போலீஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் மீட்பு பணிகள் மாலை 5.17 மணியளவில் நிறைவு பெற்றது என்றார் அவர்.