Offline
Menu
கர்ப்பிணிக் காதலியைக் கொலை செய்து எரித்த வழக்கு: இளைஞருக்கு மரண தண்டனை
By Administrator
Published on 10/16/2025 08:00
News

கிள்ளான்:

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சபாக் பெர்ணாமில் தனது கர்ப்பிணி காதலியைக் கொன்று எரித்த குற்றத்திற்கு 22 வயதான முஹமட் ஃபக்ருல் ஐமன் சஜாலிக்கு, கிள்ளான் உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்தச் சம்பவம் 2023 மே 22 முதல் 23 வரை ஜாலான் சுங்கை லிமாவில் நடந்தது. 21 வயதான நூர் அனிசா அப்துல் வஹாப், 18 வார கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவர் கொடூரமாக தாக்கப்பட்டு, குத்திக் கொல்லப்பட்ட பின்னர் எரிக்கப்பட்டார்.இது “முன்கூட்டியே திட்டமிட்ட கொடூரமான செயல்” என்று, நீதிபதி நோராஸ்லின் ஓத்மான் கூறினார்.

இவ்வழக்கில் அரசு தரப்பு 112 சான்றுகளை சமர்ப்பித்தது, அதில் அல்ட்ராசவுண்ட் படம், கத்தி, குச்சி, பாதிக்கப்பட்டவரின் ஆடைகள் உள்ளிட்டவை அடங்கும். துணை அரசு வழக்கறிஞர் நூருல் ஆஷிகின் சுல்கிஃப்லி, “இது இரண்டு உயிர்களைப் பறித்த கொடூரமான குற்றம்; சமூகத்துக்கு பாடமாக இருக்க வேண்டும்” எனக் கூறி, மரணதண்டனையை வலியுறுத்தினார்.

பாதுகாப்பு தரப்பு, குற்றம் சாட்டப்பட்டவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார் என்றும், கர்ப்பம் அவருக்குச் சம்பந்தமில்லாதது என்றும் வாதித்தது. எனினும், நீதிமன்றம் அவற்றை ஏற்காமல், குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு மரண தண்டனையை உறுதி செய்தது.

Comments