சென்னை:
இந்தியாவின் பிரபல இசையமைப்பாளரும், திரைப்பட இசைக்கலைஞர் சங்கத்தின் தலைவருமான சபேஷ் இன்று (23.10.2025) மதியம் 12.15 மணிக்கு இந்திய நேரப்படி காலமானார்.
68 வயதாகும் இவரது இறப்புச் செய்தியை அவரது உறவினர்கள் மற்றும் திரைப்பட இசைக்கலைஞர் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர்களான, இரட்டை சகோதரர்கள் சபேஷ் – முரளி ஆகியோர் இணைந்து பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.
இவர்களின் இணைப்பு தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
பின்னணிப் பாடல்களில் இருவரும் குரல் கொடுத்ததுடன், கானா இசை உலகில் தனித்த அடையாளம் பெற்றிருந்தனர்.
சபேஷ், தனது சகோதரர் முரளியுடன் இணைந்து ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘ஆட்டோகிராப்’, ‘பட்டாளம்’, ‘மிளகா’, ‘அரசாங்கம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவரது மறைவு, தமிழ் திரையுலகிற்கும் இசை உலகிற்கும் ஏற்பட்ட பெரும் இழப்பாக பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.