Offline
Menu
தெலுங்கானாவில் ஒரே கிராமத்தை சேர்ந்த 3 நண்பர்கள் தற்கொலை
By Administrator
Published on 10/26/2025 02:46
News

தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், அப்துல்லாபூர் மெடா அடுத்த கோஹோடாவை சேர்ந்தவர் வைஷ்ணவி (வயது 18). அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்கள் ராகேஷ் ( 21) மற்றும் ஸ்ரீஜா (18).

3 பேரும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தனர். நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர்.

இந்த நிலையில் வைஷ்ணவிக்கு வயிற்று வலி இருந்து வந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை வைஷ்ணவியை அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். அப்போது வைஷ்ணவி குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வைஷ்ணவி இறந்த தகவல் ராகேஷுக்கு தெரிய வந்தது. இதனால் மன வேதனையில் இருந்து வந்தார். நேற்று முன் தினம் இரவு படுக்கை அறைக்கு தூங்க சென்றார். அவர் அந்த அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

2 நண்பர்கள் தற்கொலை செய்து கொண்ட தகவல் ஸ்ரீஜாவுக்கு தெரியவந்தது. நெருங்கிய நண்பர்கள் தற்கொலை செய்து கொண்டதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று அதிகாலை ஸ்ரீஜாவின் தந்தை வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். படுக்கை அறைக்குச் சென்ற ஸ்ரீஜா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் அடுத்தடுத்து ஒருவர் பின் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

Comments