புக்கிட் காயு ஹித்தாம்:
முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறி அதிகாரப்பூர்வ உடையணிந்து நாட்டிற்குற் நுழைய முயற்சித்த 6 வங்காளதேச பிரஜைகளை அமலாக்க தரப்பினர் தடுத்து நிறுத்தினர்.
4 ஆண்கள், 2 பெண்கள் என அந்த அறுவரும் 30 வயதுக்கு மேல்பட்டவர்கள் என எல்லை பாதுகாப்பு – கட்டுப்பாட்டு இலாகா கமாண்டர் முகமட் நசாரூடின் தெரிவித்தார்.
குறிப்பாக ஆண்கள் Coat உடையும் பெண்கள் புடவையும் அணிந்திருந்தனர்.
அவர்கள் புக்கிட் காயு ஹித்தாம் சுங்கத்துறை வளாகம் (ICQS) வாயிலால தரை வழி பயணமாக நாட்டிற்குள் வர முயன்றுள்ளனர்.
ஆனாலும் நிர்ணயக்கப்பட்ட விதிமுறைகளை செய்யாததும் முறையான சுற்றுப்பயணிகள் இல்லை என்பதும் சந்தேகிக்கப்படவே அவர்களின் வருகை தடுத்து நிறித்தப்பட்டது.
மேலும் அந்த அறுவரும் உடனடியாக வந்த வழியிலே தமது வாழ்க்கையை நாட்டிற்கு திரும்பச் செல்லும்படி உத்தரவிடப்பட்டது.
இதனிடையே நாட்டின் எல்லைக் கதவுகள் எப்பொழுதுமே சிறந்த பாதுகாப்பு நிலையில் உள்ளதை எல்லை பாதுகாப்பு – கட்டுப்பாட்டு இலாகா உறுதிச் செய்கின்றது எனவும் முகமட் நசாரூடின் விவரித்தார்.