புத்ரா ஜெயா:
நாட்டின் தொலைபேசி – இணைய தொடர்பு நிறுவனங்களான CelcomDigi, Maxis, TM, U Mobil ஆகிய தரப்பினர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் தீமோர் லெஸ்தேவில் தங்கள் தொடர்பு, தரவு வளையத்தை (data roaming) தொடங்கியுள்ளனர்.
அதே சமயம் YTL Communications தரப்பு அந்நாட்டில் தனது சேவையை இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கியுள்ளதால் தொடர்புத்துறை அமைச்சு தனது கீழ் இயங்கும் தொடர்பு, பல்லூடக ஆணையம் வாயிலாக தெரிவித்துள்ளது.
ஆசியானின் மற்ற அங்கத்துவ நாடுகளை போலவே தீமோர் லெஸ்தேவில் இருக்கும் மலேசியர்களும் மலிவு விலையில் தொடர்பு, தரவு வளையத்தை (data roaming) பெறுவதை உறுதிச் செய்வதற்கு இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
தீமோர் லெஸ்தேவில் இந்த 4G
தொடர்பு வளையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன் இருந்த 2G, 3G தொடர்பு வளையங்களை காட்டிலும் சிறந்த அடைவுநிலையாக பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) தீமோர் லெஸ்தே தொடர்பு அமைப்பு (ANC) இடையிலான கூட்டமைப்பு, இரு நாடுகளின் தொலைபேசி – இணைய தொடர்பு நிறுவனங்களின் ஆதரவின் வாயிலாக இந்த வளர்ச்சி சாத்தியமாக்கப்பட்டுள்ளது.
அதோடு இம்முறை ஆசியான் உச்சநிலை மாநாட்டை
ஏற்று நடத்தும் கடமை அடிப்படையிலும் தொழில்நுட்பம் ஒற்றுமையையும் வாய்ப்புகளையும் உயர்த்தும் இந்த பிராந்தியத்தில் மக்களை முன்நிறுத்தி சமூகத்தை வலுப்படுத்தும் ஆசியானின் இணை பொறுப்புடைமையை வெளிகாட்டும் வகையிலும் இந்த அடைவுநிலை உள்ளது.
இந்நிலையில் ஆசியானில் 11ஆவது உறுப்பு நாடாக தீமோர் லெஸ்தே இணைந்திருப்பதை மலேசியா வரவேற்கிறது.
டிஜிட்டல் தொடர்பை முதன்மைப்படுத்தும் வழி நோக்கிய
ஆசியானின் ஒற்றுமையையும் இலக்கையும் வலுப்படுத்துவதில் இது ஒரு வரலாற்றுப்பூர்வ நிகழ்வாகும்.
இதனிடையே இம்முறை ஆசியான் உச்சநிலை மாநாட்டை ஏற்று நடத்தும் என்ற முறையில், எல்லை ஒருங்கிணைப்பினை வலுப்படுத்தும் – எல்லை கடந்த தொடர்பு வளையத்தை பிரபலப்படுத்துவதிலும் ஆதரவளிப்பதில் மலேசியா தொடர்ந்து பொறுப்புடைமை கொண்டிருப்பதாக அமைச்சு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.