தெமெர்லோ:
தாமான் ஜெயா பகுதியில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 50 வயது பெண்ணிடம் இருந்து தங்க நெக்லஸை பறித்துச் சென்றதில், அவர் கழுத்தில் காயம் ஏற்பட்டது.
குறித்த சம்பவம் 3.30மணியளவில் நடந்தது என்றும், முழுக்க கருப்பு உடை அணிந்திருந்த ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து, பாதிக்கப்பட்டவர் அணிந்திருந்த தங்க நெக்லஸை பறித்துச் சென்றார் என்று, காவல்துறைத் தலைவர் முகமட் நசிம் பஹ்ரோன் தெரிவித்தார்.
மேலும் சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரிடமிருந்து தங்க வளையலைப் பறிக்க முயன்று தோல்வியடைந்து, பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார். இதில் RM10,000 மதிப்புள்ள நகை இழந்ததாகவும், பாதிக்கப்பட்டவரின் கழுத்தில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 394 (காயம் ஏற்படுத்தி கொள்ளை) கீழ் விசாரிக்கப்படுகிறது. அதே பகுதியில் சமீபத்தில் நிகழ்ந்த மற்றொரு கொள்ளை சம்பவத்துடனும் தொடர்பு இருப்பதற்கான சாத்தியம் குறித்து போலீசார் ஆராய்கின்றனர் என்று அவர் கூறினார்.
பொதுமக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக கதவுகள், ஜன்னல்கள் பூட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறும், சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கண்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.