கோலாலம்பூர்:
பேராக், கெடா மற்றும் பினாங்கில் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது ,நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, அங்குள்ள தற்காலிக வெளியேற்ற மையங்களில் (PPS) தங்கவைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,937 ஆகக் குறைந்துள்ளது, இந்த எண்ணிக்கை நெரு பிற்பகல் 3,523 பேராக இருந்தது.
பேராக்கில் , வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 375 குடும்பங்களைச் சேர்ந்த 1,158 ஆகக் குறைந்துள்ளது, இந்த எண்ணிக்கை நேற்று பிற்பகல் 1,339 பேராக இருந்தனர். தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள நான்கு மாவட்டங்களில் இன்னும் செயல்படும் 12 PPSகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று, மாநில பேரிடர் மேலாண்மைக் குழு (JPBN) செயலகம் தெரிவித்துள்ளது.
கெடாவில்,நேற்று பிற்பகல் 381 குடும்பங்களைச் சேர்ந்த 1,335 பேர் தங்கியிருந்த நிலையில், இரவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 329 குடும்பங்களைச் சேர்ந்த 1,169 பேராகக் குறைந்துள்ளது.
அதேநேரம் பினாங்கில், நேற்று பிற்பகல் 233 குடும்பங்களைச் சேர்ந்த 849 பேராக இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து, 179 குடும்பங்களில் இருந்து 646 பேராக பதிவாகியுள்ளது.
சமூக நலத் துறையின் இன்போ பென்கானா போர்ட்டலின் படி, இரவு 7.44 மணி நிலவரப்படி, செபெராங் பிறை தெங்காவில் (SPT) உள்ள செக்கோலா மெனெங்கா கெபாங்சான் பெர்மாடாங் பாசிரில் இயக்க்கிவந்த நிவாரண மையத்தில், முன்பு 10 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் தங்கியிருந்த நிலையில் , அவர்கள் அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதால் அங்கு இயங்கிவந்த ஒரு நிவாரண மையம் நேற்றிரவு மூடப்படடது மூடப்பட்டது.