Offline
Menu
அமெரிக்காவில் 8,000 விமானங்கள் தாமதம் — அரசு முடக்கம் தீவிரம்!
By Administrator
Published on 10/28/2025 11:02
News

வாஷிங்டன்:

அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) மட்டும் 8,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமானது, மத்திய அரசாங்கத்தின் துறை முடக்கம் 26-வது நாளை எட்டிய நிலையில் விமானப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க போக்குவரத்து அமைச்சர் ஷான் டஃபி தெரிவித்ததாவது:

“ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) 22 இடங்களில் பணியாளர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. இதனால் வருங்காலங்களில் மேலும் பல விமானங்கள் தாமதமாகவோ அல்லது ரத்தாகவோ வாய்ப்பு உள்ளது,” என்றார்.

‘ஃப்ளைட்அவேர்’ இணையதளத்தின் தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிவரையிலும் 8,000-க்கும் அதிகமான விமானங்கள் தாமதம் பதிவாகியுள்ளது. இது, ஒரு நாள் முன்பு (அக்டோபர் 25) பதிவான 5,300 தாமதங்களை விட அதிகமாகும்.

இந்த மாதம் அக்டோபர் 1 முதல் அமெரிக்க அரசு முடங்கியுள்ள நிலையில், 13,000 ஆகாயப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களும், 50,000 போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகளும் சம்பளமின்றி பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Comments