Offline
Menu
1,219 மாணவர்களின் தவறான நடத்தை; 79 பள்ளிகளில் சிலாங்கூர் போலீஸ் திடீர் ஆய்வு
By Administrator
Published on 10/28/2025 11:22
News

ஷா ஆலம்:

மாணவர் ஒழுக்கத்தை வலுப்படுத்தவும் தவறான நடத்தைகளைத் தடுக்கவும் கடந்த மூன்று நாட்களில் சிலாங்கூர் மாநிலம் முழுவதும் 79 பள்ளிகள் மற்றும் விடுதிகளில் போலீசார் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

ஆரோக்கியமற்ற செயல்பாடுகளிலிருந்து பாதுகாப்பான மற்றும் உகந்த கற்றல் சூழலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த திடீர் சோதனைகள் நடத்தப்பட்டதாக, சிலாங்கூர் துணை காவல்துறைத் தலைவர் டிசிபி முகமட் ஜைனி அபு ஹாசன் கூறினார்.

“இதுவரை, எந்த பெரிய பிரச்சினைகளும் கண்டறியப்படவில்லை,” என்று அவர் புக்கிட் ஜெலுதோங்கில் உள்ள செக்கோலா மெனெங்கா கெபாங்சான் ஷா ஆலமில் காலை கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

Comments