Offline
Menu
‘இட்லி கடை’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
By Administrator
Published on 10/28/2025 23:36
Entertainment

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் ‘இட்லி கடை’ படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் நித்யா மேனன் கதாநாயகியாகவும், அருண் விஜய் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர் தயாரித்துள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படம் வெளியான முதல் நாளிலே நல்ல வசூல் குவித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வரும் “இட்லி கடை” படத்தின் ஓடிடி ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டுள்ளனர். இந்நிலையில், “இட்லி கடை” படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற 31-ந் தேதி வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Comments