Offline
Menu
SUV வாகனம் மோதியதில் தாய் பலி; இரண்டு வயது மகள் படுகாயம்
By Administrator
Published on 10/30/2025 09:00
News

பினாங்கின் ஜார்ஜ் டவுனில் ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவை கடக்கும்போது, ​​ஒரு  SUV வாகனம் மோதியதில் வெளிநாட்டு பெண்மணியான தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு அவரது இரண்டு வயது மகள் படுகாயமடைந்தார். திமூர் லாவூட் காவல்துறைத் தலைவர் அப்துல் ரோசாக் முஹம்மது, 40 வயது பெண் பலத்த காயங்களுக்கு ஆளாகி இறந்தார் என்று கூறினார்.

இரவு 8.40 மணியளவில், 57 வயதுடைய ஒருவர் சுங்கை துவாவில் உள்ள தனது வீட்டிலிருந்து பினாங்கு சர்வதேச விமான நிலையத்தை நோக்கி எஸ்யூவியை ஓட்டிச் சென்றதாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது. அவரது வாகனம் சாலையைக் கடக்க முயற்சித்த உயிரிழந்தவர் மீதும் அவரது இரண்டு வயது மகள் மீது மோதியது என்று அவர் கூறியதாக பெர்னாமா தெரிவித்தது.

எஸ்யூவி ஓட்டுநர் காயமடையவில்லை என்றும், கவனக்குறைவாகவோ அல்லது ஆபத்தான முறையில் வாகனமோட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ரோசாக் கூறினார்.

Comments