கோலாலம்பூர்,
அரசாங்க தரப்பை சேர்ந்தவர்கள் அல்லது எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் என யாராக இருந்தாலும் சரி, பொது ஊழியர்களை குறை கூறுபவர்கள் மீது நான் நடவடிக்கை என மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் எச்சரித்தார். முன்னதாக இன்று மக்களவை கூட்டத் தொடரில் அமெரிக்கா – மலேசியா இடையிலாம வர்த்தக ஒப்பந்தம் (ஏ.ஆர்.டி) குறித்து முதலீடு- வர்த்தக- தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸஃரூல் உரையாற்றும்போது சில எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தமிட்டதை அடுத்து சபாநாயகர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
அந்த கூற்று (அமைச்சரின் உரை) இனியும் கருத்துகள் கூற வேண்டாம். அதே போல் பொது ஊழியர்களையும் குறை சொல்ல வேண்டாம். அமைச்சரின் உரை மீது அதிருப்தி அல்லது கேள்வி கேட்க முனைந்தால் அது வேறு விவகாரம்.
ஆனால் பொது ஊழியர்களை இழிவுப்படுத்தாதீர். நான் பெற்றதை உங்களுக்கு காண்பிக்க வேண்டுமா? என்னை வம்புக்கு இழுக்காதீர். ஒரு சிலர் அரசாங்க தலைமைச் செயலாளரையும் இழிவுப்படுத்துகின்றனர். நாளை மக்களவை கூட்டத் தொடரில் அமைச்சர் சட்ட மசோதா தாக்கல் செய்வார். அப்போது கேள்வி எழுப்புங்கள் என்றார் அவர்.