ஷா அலாம்:
சிலாங்கூரின் புன்சக் பெர்டானா அருகே உள்ள ஜாலான் பூலாவ் அங்சா காட்டுப் பகுதியில் இன்று மாலை சுமார் 2.4 ஹெக்டேர் (6 ஏக்கர்) பரப்பளவிலான காடு தீ ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சம்பவம் தொடர்பில் மாலை 4.15 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததும், மூன்று தீயணைப்பு நிலையங்களிலிருந்து குழுக்கள் அனுப்பப்பட்டன என்று, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் (JBPM) சிலாங்கூர் மாநில செயல்பாட்டு உதவி இயக்குநர் அமாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்ததார்.
“சுமார் 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட தீ மாலை 6.05 மணிக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், மாலை 6.30 மணியளவில் 80 சதவீத தீ அணைக்கப்பட்டு, மீதமுள்ள 20 சதவீதப் பகுதியில் தீ அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என்று, அவர் சொன்னார்.