Offline
Menu
பாகிஸ்தான்: ராணுவ வாகனம் மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்; கேப்டன் உள்பட 6 வீரர்கள் பலி
By Administrator
Published on 10/31/2025 14:12
News

லாகூர்,பாகிஸ்தானின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய குர்ரம் பழங்குடியின மாவட்டத்தில் சுல்தானி பகுதியில் பாதுகாப்பு படையினரின் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது, வாகனத்தின் மீது தெஹ்ரீக்-இ-தலீபான் என்ற பயங்கரவாத அமைப்பினர் துப்பாக்கி சூடு நடத்தினர். தொடர்ந்து அவர்களை இலக்காக கொண்டு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்க செய்யப்பட்டது. இதில் ராணுவ கேப்டன் ஒருவர் உள்பட 6 வீரர்கள் மரணம் அடைந்தனர்.

எனினும் தொடர்ந்து நடந்த துப்பாக்கி சண்டையில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அந்த பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த வீரர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த மாத தொடக்த்தில், ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியில் ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 துணை ராணுவ படையினர் மற்றும் 2 அதிகாரிகள் உயிரிழந்தனர். தெஹ்ரீக்-இ-தலீபான் என்ற பயங்கரவாத அமைப்பினரே இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

Comments