கிங்ஸ்டன்,பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டமைப்பு நாடுகள் கரீபியன் தீவுநாடுகள் என அழைக்கப்படுகின்றன. இதில் கியூபா, ஹைதி, ஜமைக்கா, டொமினிக்கன் குடியரசு உள்பட 13 நாடுகள் உள்ளன.
இதனிடையே, பசிபிக் பெருங்கடலில் மொலீசா என்ற புயல் உருவானது. இந்த புயல் நேற்று கரீபியன் நாடுகளை தாக்கியது. புயலால் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மொலீசா புயலால் 49 பேர் உயிரிழந்துள்ளனர். ஹைதி நாட்டில் 30 பேரும் ஜமைக்கா நாட்டில் 19 பேரும் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். புயலால் 52 பில்லியன் டாலர்கள் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொலீசா புயல் தற்போது பெர்முடா நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.