Offline
Menu
இதய நோயில் இருந்து மீண்ட 2,500 குழந்தைகளுடன் உற்சாகமாக உரையாடிய பிரதமர் மோடி
By Administrator
Published on 11/03/2025 14:01
News

சத்தீஸ்கர் மாநிலம் உருவானதன் 25-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது.இதையொட்டி சத்தீஸ்கரில் உள்ள நவ ராய்ப்பூரில் நடைபெற்ற ‘சத்தீஸ்கர் ரஜத் மஹோத்சவ்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவர் 14,260 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக நவ ராய்ப்பூரில் அடல் நகரில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி மருத்துவமனையில், வாழ்க்கை பரிசு என்ற திட்டத்தின் கீழ் பிறவியிலிருந்து உள்ள இதய நோயக்கு இலவச அறுவை சிகிச்சை பெற்ற சுமார் 2,500 குழந்தைகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

அவர்களிடம் அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து மோடி அன்புடன் விசாரித்தார். அவருடன் பேசிய குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அளித்து அவர்களுக்கு மறுபிறவி அளிக்கும் மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பிரதமர் மனதார பாராட்டினார்.

Comments