Offline
Menu
மலேசியாவின் அமெரிக்க பல்கலைக்கழகம் (யுவா)-இன் முதல் பட்டமளிப்பு விழா
By Administrator
Published on 11/03/2025 17:57
News

மலேசியாவின் அமெரிக்க பல்கலைக்கழகம் (யுவா)-இன் முதல் பட்டமளிப்பு விழா 

தேதி: 2 நவம்பர் 2025 (ஞாயிற்றுக்கிழமை) நேரம்: மதியம் 2.00 மணி – மாலை 6.00 மணி இடம்: UM முன்னாள் மாணவர் மண்டபம், மலாயா பல்கலைக்கழக வளாகம், KL 

அமேரிக்க புளோரிடா மாநிலத்தின் கல்வி சட்ட அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட சமயப் பல்கலைக்கழகமான யோகா பல்கலைக்கழகம் (யுவா), மலேசியாவில் அதன் முதல் பட்டமளிப்பு விழாவை கடந்த 02/11/25 நடத்தியது. 

இந்நிகழ்விற்கு தலைமை தாங்கிய டத்தோ சகாதேவன் அவர்கள் அமெரிக்க யோகா பல்கலைக்கழக மலேசிய பிரிவின் புரவலராக நியமிக்கப் பட்டதுடன், அவருக்கு அமெரிக்க யோகா பல்கலைக்கழகத்தின் உயரிய விருதான "முதன்மை கௌரவ முனைவர்' பட்டமும் வழங்கப்பட்டது. 

நமது மலேசிய இந்து சகோதர சகோதரிகள் தங்கள் கடின உழைப்பால்; 

✨ யோக அறிவியல் ✨ இந்து சமயம் ✨ இந்திய நுண்கலை ✨ இந்திய பாரம்பரிய மருத்துவம் ✨ இந்திய ஆன்மீக அறிவியல் போன்ற துறைகளில் 50 பேர் பட்டயம், 30 முதுகலைப் பட்டம், 20 பேர் முனைவர் பட்டம் போன்ற உயர்கல்வி விருதுகளைப் பெற்றனர். 

இது தவிர அமெரிக்க யோகா பல்கலைக்கழகத்தின் அங்கிகாரம் பெற்ற 30 கல்வி மையங்கள் சார்ந்த 400 மாணவர்கள் சமயம், யோகம், இசை, நடனம், திருமுறை, திருமந்திரம் போன்ற துறைகளில் சான்றிதழ்கள் பெற்றனர். 

மலேசியாவில் சனாதன தர்ம கல்வியின் வளர்ச்சிக்கு வித்திடவும் ஆதரிக்கவும் 700க்கும் மேற்பட்டவர்கள் இந்த வரலாற்று நிகழ்வில் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். 

பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பரிசுகள், நினைவுப் பொருட்கள் மற்றும் சிற்றுண்டிகளுடன் கூடிய ஒரு நினைவுப் பை வழங்கப்பட்டது. 

இந்த பட்டமளிப்பு விழா நமது சமூகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது.

Comments