கோலாலம்பூர் :
நேற்று முதல் சமூக ஊடகங்களில் பரவி வரும் “அம்பாங் லைன் LRT ரயில் பெட்டி தீப்பிடித்து எரிகிறது” என்ற தலைப்பில் வெளியான வீடியோ பொய்யானது என பிரசாரனா மலேசியா பெர்ஹாட் (பிரசாரனா) நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எந்தவொரு Rapid KL ரயில் பெட்டி அல்லது அதன் வசதியிலும் தீ விபத்து சம்பவமே நடைபெறவில்லை என்று கூறியது.
“எங்கள் செயல்பாட்டு குழுவினரின் உள் சோதனை மற்றும் சரிபார்ப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; அதன் முடிவில் அனைத்து ரயில் சேவைகளும் வழக்கம்போல எந்த இடையூறும் இன்றியே இயங்குகின்றன” என்று தெரிவித்தது. தவறான தகவல்களைப் பரப்புவதை நிறுவனம் தீவிரமாகக் கருதுகிறது,
ஏனெனில் இது பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தையும் நாட்டின் பொதுப் போக்குவரத்து அமைப்பின் நற்பெயருக்கும் சேதத்தையும் விளைவிக்கும்.