கோலாலம்பூர், 07 நவம்பர் - கடந்த ஜனவரி மாதம், ஜுராசிடா மன்ற நிர்மாணப் பணிக்குத் தமது அதிகாரப்பூர்வ பணி தொடா்பில் ஓர் ஒப்பந்தப்புள்ளிக்கு 50 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பணத்தைக் கையூட்டாக பெற்றதாகவும் மீது சம்மதப்பட்ட குற்றஞ்சாட்டை கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம் (டி.பி.கே.எல்)-லின் மூத்த அதிகாரி ஒருவர், இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணைக்குக் கோரினார்.
டி.பி.கே.எல் நிர்வாகப் பிரிவில் நிர்வாக இயக்குநராக பணியாற்றிய 54 வயதான முஹம்மது உஹ்மத் மகமூத் என்பவருக்குப் புதிய அடுக்குமடிக்குச் சம்மந்தப்பட்டுள்ளது.
தமது அதிகாரப்பூர்வ வேலைக்குத் தொடர்புடைய அதிகாரம் பெற்ற ஒரு நபரிடமிருந்து முறையற்ற வகையில் 50,000 ரிங்கிட் ரொக்கத் தொகையைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டு ஜனவரி 10-ஆம் தேதி, புக்கிட் துங்கு, ஜாலான் சங்கால் துங்குவில் உள்ள வீடொன்றில் அரங்கேற்றப்பட்டதாகச் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.
இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கக்கூடிய குற்றவியல் சட்டம் செக்ஷன் 165-இன் கீழ் இவருக்கு விசாரிக்கப்படுகிறது.
வழக்கு விசாரணை நிறைவுபெறும் வரை மாதத்திற்கு ஒருமுறை கோலாலம்பூர் எம்.ஏ.சி.சி அலுவலகத்திற்குச் சென்று கையெழுத்திட வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனைகளுடன் 15,000 ரிங்கிட் ஜாமீன் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் அந்த நபரை, நீதிபதி அக்ரா அல்லி விடுவித்தார்.
இவ்வழக்கின் மறுவிசாரிப்பு அடுத்தாண்டு ஜனவரி 12-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.