கோலாலம்பூர், 07 நவம்பர் - நேற்று முன் தினம் புக்கிட் பூச்சோங்கில் உள்ள ஒரு கடையில் இந்தியாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்நாட்டைச் சேர்ந்த அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் கொலை செய்யப்பட்ட ஆடவருடன் தங்கியிருந்த நண்பரும் ஒருவராவார்.
சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவும் நோக்கில் அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக செர்டாங் மாவட்ட போலிஸ் தலைவர் ஏ.சி.பி. முஹம்மது உமாமிட் அப்துல் அஸ்ஹாரி தெரிவித்தார்.
விசாரணைக்கு உதவுவதற்காக புகாரளித்தவர் உட்பட நான்கு நபர்களின் வாக்குமூலங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஏ.சி.பி. முஹம்மது உமாமிட் குறிப்பிட்டுள்ளார்.
இக்கொலை சம்பவத்தில் முக்கிய சந்தேக நபராக இந்தியாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவரே ஆரம்ப கட்ட போலிஸ் அடையாளம் கண்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட ஆடவருக்கு 49 வயது என்றும் தொழிலதிப் வலியுறுநராக சுயதொழில் செய்து வந்த அவர் மலேசியாவில் 19 ஆண்டுகளாக வசித்து வந்ததாகவும் முஹம்மது உமாமிட் கூறிக்னார்.
கொலை வழக்கு என்பதால் குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் நடத்தப்படும் விசாரணைக்கு உதவ சம்பவம் நிகழ்ந்த இடத்தில் உள்ள மறைக்காணிக் காட்சிகளையும் போலிஸ் ஆய்வு செய்து வருவதாகவும் மேலும் விவரித்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் அருகில் உள்ள போலிஸ் நிலையத்திலோ அல்லது 03-8074 2222 என்ற எண்களில் புகாரளிக்கலாம்.