லண்டன், 07 நவம்பர் - பஹ்ரைனுக்கு மூன்று நாள்கள் பயண மேற்கொண்டுள்ள மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், வியாழக்கிழமை மனமாவில் உள்ள இஸ்ஸான் சக்கீரில் அரச வரவேற்பு அளிக்கப்பட்டார்.
இஸ்ஸான் சக்கீரை அடைந்ததும், அர்ப்பட்டின் மாணவர்கள் குழு ஆரவாரக் கெலிகையையும் பஹ்ரைன் கொடியையும் அசைத்து, சுல்தான் இப்ராஹிம் மற்றும் பஹ்ரைன் மன்னர் ராஜா ஹமாட் பின் இஸா அல்-கலிஃபாவையும் வரவேற்றனர்.
சுல்தான் இப்ராஹிம் மற்றும் மன்னர் ஹமாடும் பஹ்ரைனின் பாரம்பரிய நடனமான "Ardah"-வைக் கண்டு களித்தனர்.
பின்னர், Podium of Honour-க்கு புறப்பட்ட அவர்களுக்கு 21 முறை பீரங்கிக் குண்டுச் சத்தத்துடன் அரச மரியாதை அளிக்கப்பட்டது.
மாமன்னருடன் அவரின் புதல்வர் துங்கு தெமன்கோங் ஜோஹூர் துங்கு இட்ரிஸ் இஸ்கண்டர் அல்-ஹாஜ் அப்துல் ரஹ்மான், துங்கு லியாம்டித் துங்கு அப்துல் ரஹ்மான் மற்றும் துங்கு புத்ரா ஜோஹூர் துங்கு அப்துல் லத்தீப் அல்-ஹாஜ் உபைத் பட்டத்து இளவரசரும் பிரதமரும் சுல்தான் சல்மான் ஹமாட் அல்-கலிஃபாவும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னர், அஃறிரு நாடுகளின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு சுல்தான் இப்ராஹிம் மற்றும் மன்னர் ஹமாடும் அதிகாரப்பூர்வ சந்திப்பு நடத்தப் புறப்பட்டனர்.
அச்சந்திப்புக்குப் பின்னர், பஹ்ரைனின் வரலாற்றில் முக்கிய இடமான சலமான் அல்-கலிஃபா நினைவுச் சின்னத்திற்கு வருகை மேற்கொண்டார்.