Offline
Menu
தொழில்நுட்ப கோளாறால் விமான சேவை பாதிப்பு: பயணிகள் அவதி
By Administrator
Published on 11/09/2025 14:18
News

காத்மண்டு:நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தின் ரன்வேயில் இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்க ஏதுவாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலைய ரன்வேயில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் அனைத்தும் ஒளிரவில்லை. விமான நிலைய ரன்வே வெளிச்சமின்றி இருட்டாக காணப்படுகிறது. இதனால், விமானங்கள் காத்மண்டு விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

காத்மண்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் மிகுந்த அவதிப்பட்டனர்.தொழில்நுட்ப கோளாறை செய்யும் பணியில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Comments