புக்கிட் மெர்த்தாஜாம்:
மலேசியா தனது வெளிநாட்டு கொள்கையில் சுதந்திரமான மற்றும் அரசுரிமை கொண்ட நாடு என்ற அடையாளத்தை நிலைநிறுத்தி வருகின்றது என்று பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
அவர் கூறியதாவது, எந்தவொரு சக்திவாய்ந்த நாடுக்கும் வளைந்து கொடுக்காமல், நாட்டின் நலனையும் பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு மலேசியா தன்னுடைய கொள்கைகளை தீர்மானிக்கிறது.
“மலேசியா எப்போதும் சுதந்திரமான முடிவுகளை எடுக்கும் நாடு. எந்த வெளிநாட்டு சக்திக்கும் தலைவணங்காது. நாங்கள் நட்பு மற்றும் வர்த்தக உறவுகளை அனைத்து நாடுகளுடனும் — அமெரிக்கா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உட்பட — பராமரிக்கின்றோம்,” என்று அவர் தெரிவித்தார்.
அவர் பட்டர்வொர்த்தில் உள்ள வடக்கு–தெற்கு விரைவுச்சாலையின் ஜுரு–சுங்கை துவா சாலைக் கட்டண முகப்பு போக்குவரத்துச் சீரமைப்பு திட்டத்தின் நிலந்திருத்தும் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.