Offline
Menu
தமிழ் திரையுலகிற்கு கம்பேக் கொடுத்த நடிகை ரோஜா
By Administrator
Published on 11/09/2025 14:30
Entertainment

சென்னை,2015 ஆம் ஆண்டில் ரோஜாவின் கில்லாடி, புலன் விசாரனை 2 ஆகிய படங்கள் வெளியாகின. அதன் பின்னர் ரோஜா அரசியலில் கவனம் செலுத்தினார். தற்போது ரோஜா , தமிழ் திரையுலகிற்கு கம்பேக் கொடுத்துள்ளார்

நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு, லெனின் பாண்டியன் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு திரும்பி உள்ளார்.

இப்படத்தில் கங்கை அமரன், சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன், ஸ்ரீதா ராவ் மற்றும் அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை டிடி பாலச்சந்திரன் எழுதி இயக்குகிறார்.

Comments