Offline
Menu
உருவகேலி செய்வதை ஏற்க முடியாது- கவுரி கிஷன் அறிக்கை
By Administrator
Published on 11/09/2025 14:31
Entertainment

சென்னை,”96, மாஸ்டர், கர்ணன்” உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை கவுரி கிஷனுக்கு அடுத்ததாக “அதர்ஸ்” திரைப்படம் வெளியாகிறது. இதற்கான புரோமோஷன் நிகழ்ச்சி கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது ஹீரோ ஆதித்யா மாதவனிடம், “ஹீரோயினை தூக்கி வைத்து நடனம் ஆடினீர்களே, அது எப்படி இருந்தது, ஹீரோயின் வெயிட்டா இல்லையா?” என்று யூடியூபர் ஒருவர் கேள்வி கேட்டார்.

அதற்கு ஹீரோ சமாளிக்கும் வகையில் பதிலளித்தார். இது கவுரி கிஷனை வெகுவாக பாதிக்க, மற்றொரு பேட்டியில் இது பற்றி பேசிய கவுரி கிஷன், அநாகரிகமாக அந்த கேள்வியை யூடியூபர் கேட்டதாக தெரிவித்திருந்தார். பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை கவுரி கிஷனிடம் தவறான கேள்வி எழுப்பிய யூடியூப்ருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம், திரைப்பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இது குறித்து நடிகை கவுரி கிஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “விமர்சனங்கள் எனது தொழிலின் ஒரு பகுதியாக இருப்பதை புரிந்திருக்கிறேன். ஆனால் ஒருவரின் உடல் அமைப்பு அல்லது தோற்றத்தை குறிவைக்கும் கேள்விகள் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதே கேள்வியை ஒரு நடிகரிடம் கேட்பார்களா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது, அந்த தருணத்தில் உறுதியுடன் நின்றது எனது கடமை என நினைக்கிறேன். இது எனக்காக மட்டுமல்ல, இதேபோன்ற அனுபவங்களை சந்தித்த அனைவருக்குமானது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ உருவக்கேலி செய்வதை ஏற்க முடியாது; இணையில்லாத ஆதரவு அளித்த அனைத்து மக்களுக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

Comments