Offline
Menu
துள்ளுவதோ இளமை திரைப்பட நடிகர் அபிநய் காலமானார்
By Administrator
Published on 11/10/2025 18:13
Entertainment

தனுஷின் துள்ளுவதோ இளமை படம் மூலம் பிரபலமான அபிநய் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4 மணிக்கு இறைவனடி சேர்ந்தார். இந்த தகவலை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினார்.

சில நாட்களுக்கு முன்னர் அவர், வறுமையில் வாடி எலும்பும் தோலுமாக இருக்கும் காணொளி இணையத்தில் பரவிதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திரைப்படத்தில் பார்த்த அபிநய்க்கும் அந்த காணொளியில் பார்க்கும் அபிநய்க்கும் இடையே உள்ள துயரமான மாற்றத்தை பார்த்தவர்கள் மிகுந்த வேதனை தெரிவித்தனர்.

தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படம் மூலம் நடிகரான அபிநய், அதன் பிறகு ஜங்ஷன் உள்பட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். பின்னர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். அவரின் பிரிவு குறித்து நண்பர்களும் திரைப் பிரபலங்களும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

Comments