Offline
Menu
மீண்டும் காதல் வலையில் விழுந்தாரா சமந்தா
By Administrator
Published on 11/11/2025 15:08
Entertainment

நடிகை சமந்தா விவகாரத்துக்குப் பிறகு ஒருவரைக் காதலிப்பதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வந்தது.

‘ஃபேமிலி மேன்’ இணையத்தொடரில் நடித்தபோது அதன் இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் காதல் மலர்ந்ததாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது.

இருவரும் தங்களைப் பற்றி வெளிவந்த தகவல்களை ஏற்கவோ, மறுக்கவோ இல்லை. எனினும் இருவரையும் பல்வேறு இடங்களில் பார்த்ததாகப் பலர் கூறிவந்தனர்.

ஆனால், கடந்தவாரம் வரை இருவரும் காட்சி தரும் புகைப்படமோ, காணொளியோ வெளியாகவில்லை. இதனால் காதல் செய்தி வெறும் கிசுகிசு என சில ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஜ் நிடிமோரு, சமந்தா இருவரும் கட்டியணைத்தபடி கேமராக்கள் முன்பு நின்றனர். இந்தப் படம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

ராஜ் நிடிமோரு கடந்த 2022ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து பெற்றவர். எனவே, இருவரும் விரைவில் காதலை உறுதி செய்வர் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Comments