சில நாட்களுக்கு முன்னதாக 89 வயதான பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை அறிந்து அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இதனிடையே, நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை சீராக இருப்பதாக அவருடைய மனைவியும் நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார். இதனையடுத்து, நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை தேறியதால் மும்பை தனியார் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனை அறிந்து பல்வேறு திரை பிரபலங்கள் தர்மேந்திராவை காண அவரது வீட்டிற்கு வருகை புரிந்துள்ளனர். இதனால் தர்மேந்திரா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்ப்பட்டுள்ளது