தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகரான அஜித் குமாருக்கு ‘ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர்’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. தன்னுடைய மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான ஆர்வம், ஒழுக்கம், பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்கும் அணுகுமுறை மற்றும் போட்டிகளில் காட்டும் திறமை ஆகியவற்றுக்காகவே இந்த சிறப்பு விருது வழங்கப்பட்டது.
மோட்டார் ரேசிங் துறையில் அஜித் பல ஆண்டுகளாக செயற்பட்டு வருவதுடன், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி பல சர்வதேச மட்டப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.
ரேசிங் உலகில் ஸ்டார் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு அல்லாமல், முழுக்க திறமையையும் ஒழுங்கையும் பார்த்துதான் இந்த விருது வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அஜித்தின் விளையாட்டுக் கடமையுணர்வு இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாகப் பார்க்கப்படுகிறது. இந்த விருது, அவரது மோட்டார் விளையாட்டுத் திறனுக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரமாக சமூக வலைதளங்களில் பரவலாக பாராட்டப்படுகிறது.