கோலாலம்பூர்:
இன்று காலை 11 மணி நிலவரப்படி, ஒன்பது மாநிலங்களில் உள்ள இருபத்தி நான்கு ஆறுகள் மற்றும் ஒரு அணை என்பன அபாய அளவைத் தாண்டிவிட்டன.
பஞ்சீர் வலைத்தளத்தின் தரவுகளின்படி, பெர்லிஸில் உள்ள இரண்டு நீர்நிலைகள் – கம்போங் சுங்கை பாக்காவில் உள்ள பெர்லிஸ் ஆறு மற்றும் திமா தசோ அணை – ஆகியவை அபாய அளவைத் தாண்டியதாக அறிவிக்கப்பட்டது.
கெடாவில் ஐந்து ஆறுகள் அபாய அளவைத் தாண்டியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன: தாமான் அமானில் உள்ள அனாக் புக்கிட் ஆறு; கெப்பாலா பத்தாஸில் உள்ள பாடா ஆறு; கம்போங் பஹானாவில் உள்ள பாடா ஆறு; கம்போங் படாங் பாசிரில் உள்ள பாடா ஆறு; மற்றும் கம்போங் சுங்கை பாருவில் உள்ள பாரு ஆறு என்பன அடங்கும்.
பேராக்கில், ஸ்லிம் ரிவரில் உள்ள ஸ்லிம் ஆறு மட்டுமே அபாய அளவைத் தாண்டியது.
கோலாலம்பூர் கூட்டாட்சி பிரதேசத்தில், ஜாலன் குவாரியில் உள்ள கெராயோங் ஆறும்,, அபாய மட்டத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.