ஷா ஆலம்:
சிலாங்கூர் மாநிலத்தில் 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான குடியிருப்புகளை மறுசீரமைப்பு செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதிக செலவுகள் போன்ற சவால்கள் இருந்தாலும், மாநிலத்தை மக்கள் வாழத்தக்கதாக வைத்திருக்க வேண்டும், என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருரின் ஷாரி கூறினார்.
1970–80களில் கட்டப்பட்ட பல அடுக்குமாடி குடியிருப்புகள் தற்போது பழமையான நிலையில் உள்ளதால் மறுசீரமைப்பு அத்தியாவசியமாகியுள்ளது. “செலவு மிக உயர்ந்தது என்பது உண்மை. இருப்பினும், குடியிருப்பாளர்களுக்கும் சமூகத்திற்கும் பயன் தரும் ‘வின்-வின்’ சூத்திரத்தின் அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
இதற்காக ஒரு துணை நிறுவனத்திற்கு பொறுப்பு ஒப்படைக்கப்படும்; மேலும், சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்து வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்—ஒவ்வொரு கவுன்சிலுக்கும் ஒன்று அல்லது இரண்டு திட்டங்கள் என்ற வகையில்—இவற்றை முன்னெடுக்கும் என்றும் அவர் கூறினார்.